1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 மே 2023 (10:42 IST)

12ஆம் வகுப்பு ரிசல்ட்.. விருதுநகர் மாவட்டம் முதலிடம்.. கணிதத்தில் எத்தனை பேர் சதம்?

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில் இதில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 
 
12ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்ற முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 
 
 பிளஸ் டூ பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
சென்னையில் 91.40% மாணவர்களும் 96.64 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பிளஸ் டூ பொதுத்தேர்வு கணிதத்தில் 690 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அதிகபட்சமாக 6573 மாணவர்கள் கணக்குப்பதிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
 
Edited by Mahendran