Daily Horoscope
✕

திட்டமிட்டபடி பிளஸ் டூ தேர்வு முடிவு..! இந்த தேதியில் வெளியிடும் பள்ளிக்கல்வித்துறை..!!

Written By Senthil Velan
Updated: வெள்ளி, 3 மே 2024 (13:43 IST)
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும்  6ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 
 
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் 86 மையங்களில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமையே மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்கள் அனுப்பப்படுகின்றன.

ALSO READ: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! மே 7-ல் ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!!
 
இந்நிலையில் திட்டமிட்டபடி, வரும் மே 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

28 பேர் தவெகவுக்கு ஆதரவு!.. பழனிச்சாமிக்கு ஆப்பு!.. மூவரணி போடும் பிளான்!...

கோவில்களுக்குள் செல்போனை எடுத்து செல்லலாம்.. ஆனால்.. இந்து சமய அறநிலையத்துறை முக்கிய உத்தரவு..

இன்று தமிழ்நாட்டில் மழை காலம்.. குடையுடன் வெளியே செல்லுங்கள்: பிரதீப் ஜான்

கரப்பான்பூச்சிகளுக்கு திமுக ஆதரவு எப்போதும் உண்டு: முக ஸ்டாலின்

மின்சாரம் விலை!.. ஆந்திராவை விட தமிழகத்துக்கு அதிகம்.. நடந்தது என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments