ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 மே 2024 (08:07 IST)

திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நெல்சன்… வெளியிட்ட அறிவிப்பு!

சின்னத்திரையில் இருந்து வந்து இன்று கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக நான்கே படங்களில் உயர்ந்துள்ளார் நெல்சன். அவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் ஜெயிலர் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது நெல்சன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை நெல்சனின் இணை இயக்குனர் சிவபாலன் இயக்க கவின் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் குறித்து நெல்சன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “நான் ஊடகத்துறைக்கு என்னுடைய 20 ஆவது வயதில் வந்தேன். இத்தனை ஆண்டுகாலமாக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். என் வளர்ச்சிக்கு இந்த துறை முக்கியப் பங்காற்றியுள்ளது.

இப்போது நான் FILAMENT PICTURES என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இந்த நிறுவனம் மூலமாக வித்தியாசமாகவும் ஆக்கப்பூர்வமானதுமான படைப்புகளைக் கொடுக்க உள்ளோம். எங்கள் முதல் படத்தின் அறிவிப்பு மே 3 ஆம் தேதி வெளியாகும்” என அறிவித்துள்ளார்.