செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 ஜூன் 2021 (14:03 IST)

சி.பி.எஸ்.இ +2 தேர்வு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு குறித்த வழக்கு நாளை விசாரணை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது 
 
சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண்களை ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது என்பதும் இந்த குழு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு இடைத்தேர்வுகளில் கிடைத்த மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ் டூ சிபிஎஸ்சி பொதுத் தேர்வுக்கான மதிப்பெண்களை முடிவு செய்துள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்தது.
 
இந்த நிலையில் சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தகுந்த பாதுகாப்புடன் மாணவர்களுக்கு டபுள் மாஸ்க் அணிவித்து பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் பதிவு செய்த வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்