பறவைகள் மோதியதால் விமானம் பழுது...விமான சேவை ரத்து
கோவையில் இருந்து புறப்பட்ட சார்ஜா விமானத்தில் பறவைகள் மோதி எஞ்சின் பழுதடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு 164 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் அரெபியா விமானம் ஒன்று வானில் பறக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது, பறவைகள் மோதி விமானத்தின் இரு பக்க எஞ்சின் பிளேடு பழுதானது.
இதையடுத்து அனைத்து பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
மாற்று என்ஜின் பொருத்தப்பட்ட பின்னர்தான் மீண்டும் இந்த விமானம் இயக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், என்ஜினில் இருந்து ஒரு இறந்த பறவையை அதிகாரிகள் கண்டெடுத்து அகற்றினர்.
இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் தங்க ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது, ஒரு சிலர் இந்த டிக்கெட்டை ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.