1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 ஜனவரி 2022 (09:13 IST)

பெட்ரோல், டீசல் விலையில் எப்போது மாற்றம்?

பெட்ரோல், மற்றும் டீசல் விலை கடந்த 80 நாட்களாக மாற்றமின்றி இருந்து வரும் நிலையில் எப்போது மாற்றம் ஆகும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது
 
உத்தரப் பிரதேசம் கோவா உள்பட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த தேர்தல் முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்றும் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதனை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 எனவும், டீசல் லிட்டர் விலை ரூ.91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்தாலும் தேர்தல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது