வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

19வது நாளாக விலை உயராத பெட்ரோல்-டீசல்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து 18 நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 102.49 என்ற விலையில் டீசல் விலை ரூபாய் 94.19 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது