ரூ.100- ஐ நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை
நேற்றைப் போல் இன்று இரண்டாவது நாளாக 1 லிட்டர் மற்றும் டீசல் விலை ரூ. 100 ஐ நெருங்கிவிட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையில், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வேகமாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை 5 மாநில தேர்தலின் போது விலையேற்றம் காணாமல் ஒரே விலையில் நீடித்து வந்தது.
தற்போது மீண்டும் விலை உயர தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100 தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், விலைவாசி உயர்விற்கு வழிவகுப்பதாகவும் கூறியுள்ள காங்கிரஸ் நேற்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது.
இந்நிலையில் இன்றும் அதேபோல் பெட்ரோல் பெட்ரொல் டீசல் விலை உயர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் 1 லிட்டர் ரூ.96.71 க்கு சென்னையில் விற்பனை ஆகிவருகிறது. அதேபோல் ரூ.90.92 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.
1 லிட்டர் மற்றும் டீசல் விலை ரூ. 100 ஐ நெருங்கிவிட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.