திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 ஜனவரி 2018 (04:53 IST)

பிறப்பு சான்றிதழ் தர மறுத்ததால் கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்ட குடும்பத்தினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிலாளி தன்னுடைய மகனுக்கு பிறப்பு சான்றிதழ் தர அதிகாரிகள் மறுத்து வருவதால் தன்னை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆறுமுக ரெட்டியார் என்ற மாட்டுவண்டி ஓட்டும் தொழிலாளியான இவருடைய இரண்டாவது மகனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்துள்ளது. ஆனால் அமெரிக்க விசா பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் தேவை

எனவே பிறப்பு சான்றிதழ் கேட்டு அனைத்து ஆவணங்களுடன் அவர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் ஆறுமுகரெட்டியார் மகனுக்கு பிறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் அவரது மகனுக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் அதிகாரிகள் உடனே பிறப்புச்சான்றிதழ் தர வேண்டும் அல்லது தங்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து குடும்பத்தினர்களுடன் கோட்டாட்சி அலுவலம் முன் அவர் போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் அந்த பகுதியியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.