வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 ஜனவரி 2019 (13:18 IST)

பெருங்குடியில் பொட்டலமாக்கப்பட்ட இளம்பெண்: கையில் டிசைன் டிசைனாக டாட்டூ; திக்குமுக்காடும் போலீஸ்

சென்னை பெருங்குடியில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் கை கால்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் போலீஸார் திக்குமுக்காடி வருகின்றனர்.
 
சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் இளம்பெண் ஒருவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒரு பையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்துபோன அங்கிருந்தவர்கள் இதுகுறித்து புகார் அளிக்க போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
 
அந்த பெண்ணின் கையில் இரண்டு டிசைன்களில் பச்சை குத்தப்பட்டுள்ளது. காலில் மெட்டி அணிந்திருக்கிறார். பெண்ணின் கையில் ஒரு தங்க வளையல் இருந்தது. இதை வைத்து பார்க்கும்போது அந்த பெண் ஒரு பணக்கார பெண் என தெரிகிறது. நகைக்காக பெண் கொலை செய்யப்படவில்லை எனவும் ஊர்ஜிதமாகிறது.
 
மேலும் அந்த பெண் ஒரு ஐடி ஊழியராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனாலும் போலீஸாரால் பெண்ணின் உடலை கண்டுபிடிக்கமுடியாமல் திணறி வருகின்றனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.