இதயத்தை திருடிவிட்டாள்: இளம்பெண் மீது புகார் கொடுத்த வாலிபர்; கலகலத்துப் போன போலீஸ்

lovers silloute
Last Modified புதன், 9 ஜனவரி 2019 (13:49 IST)
மகாராஷ்டிராவில் வாலிபர் பெண் ஒருவர் தனது இதயத்தை திருடிவிட்டதாக போலீஸில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். அவரின் புகாரை பார்த்த போலீஸார் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
 
புகாரில் தன் இதயத்தை ஒரு பெண் திருடிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குற்பிடப்பட்டிருந்தது. இதற்கு சட்டத்தில் இடமில்லை என போலீஸார் கூறியும் அந்த வாலிபர் இதனை ஏற்க மறுத்துவிட்டார்.
 
இதனையடுத்து உயரதிகாரிகள் அந்த வாலிபருக்கு கவுன்ஸ்லிங் அளித்த பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து சென்றார். இந்த காதல் படுத்தும் பாடு கொஞ்மா நெஞ்சமா!!


இதில் மேலும் படிக்கவும் :