வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (21:01 IST)

ஒரு கிலோ மாவுக்கு ...ஒரு குடம் தண்ணீர் ஃபிரீ .. சூடு பிடிக்கும் வியாபாரம் !

சென்னையில் பெருமளவு தண்னீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிமுக அரசு பலகட்ட முயற்சிகளை எடுத்து தண்ணீர பஞ்சத்தை தடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில் ஒருவர் தன் கடை விளம்பரத்தில்  ஒரு கிலோ மாவு வாங்கினால்..தண்ணீர் இலவசம் என்று ஒரு விளம்பரம் செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலசம் என்று விளம்பரம் ஒன்று பரவலாகி வருகிறது.
 
சென்னை ,மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு, சேலம் ஜோலார் பேட்டையிலிருந்து ரயில் வேகன்களில் தண்ணீர் கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. அதன்மூலம் 75 லட்சம் தண்ணீர் நாள்தோறும் சென்னையில் விநியோகப்படும் என்று தகவல்கள் வெளியாகின்றன.
 
இந்நிலையில் திருவல்லிக்கேணியில் ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீ இலவசம் என்ற அறிவிப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மட்டுமல்லாமல் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மக்களி மனநிலையை அறிந்து கடைக்காரர் செய்துள்ள விளம்பர உத்தியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.