ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (19:24 IST)

அரசு அதிகாரிகள் லேட்டாக வந்தால் சம்பளம் 'கட்': முதல்வர் அதிரடி உத்தரவு

அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு மேல் லேட்டாக வந்தால் அவர்களுடைய சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் உபி மாநில முதல்வர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசு உயர் அதிகாரிகள் காலை 9 மணிக்குள் அலுவலகத்திற்கு கட்டாயம் வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் அலுவலகம் வரும் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரிகள், காலை 9 மணி முதல் நண்பகல் 11 மணி வரை மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என்றும், அலுவலத்திற்கு சரியான நேரத்திற்கு வர தவறினால் அந்த அதிகாரிகளின் சம்பளம் பிடித்தம் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த உத்தரவால் உத்தரபிரதேச அரசு அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உபியில் அரசு அதிகாரிகள் பணிக்கு மிகவும் தாமதமாக வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.