மாஸ்க் அணியாமல் வந்தால் அபராதம்! – கண்டிப்பு காட்டும் சேலம்!
இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றன.
நாடு முழுவதும் நேற்று வரை 21 நாட்கள் கொரோனா பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது மேலும் 19 நீட்டித்து மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது இந்நிலையில் இரண்டாம் கட்ட ஊரடங்கை மாவட்ட நிர்வாகங்கள் கடுமையான விதிமுறைகளோடு செயல்படுத்த தொடங்கியுள்ளன.
சென்னையில் மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதி தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் மாஸ்க் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்கள் பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக்கி வருகின்றன.