1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (08:20 IST)

முதல்வரை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

முதல்வரை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா
குஜராத் மாநிலத்தில் முதலமைச்சரை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவருக்கு அடுத்த சில மணி நேரங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா மற்றும் சில எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்
 
இந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஹாடியா-ஜமால்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் ஹிடவால என்பவருக்கு அன்றைய தினம் மாலையே திடீரென கொரோனா அறிகுறி தெரிந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதனையடுத்து முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரவி இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் முதல்வர் உள்பட அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது