திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (16:30 IST)

புகைப்படத்தில் தெரிந்த பிசாசு உருவம்; அதிர்ச்சியில் மதுரை மக்கள்!

மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிசாசு நடமாட்டம் இருப்பதாக வெளியாகி வரும் புகைப்படம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி என்ற கிராமத்தில் பொதுமக்கள் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிகளை செய்து வந்துள்ளனர். பொதுவாக வேலை தொடங்கும் போதும், முடியும் போதும் பணி செய்த பகுதியை புகைப்படம் எடுத்து மேல் அதிகாரிகளுக்கு அனுப்புவது வழக்கம். பணிகளை முடித்து வழக்கம்போல புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று பார்த்தவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதில் வேலை பார்த்த இடத்தில் சுடுகாட்டு கரை அருகே கருப்பாக ஒரு உருவம் தெரிந்துள்ளது. இதை மற்றவர்களிடமும் காட்ட அது பிசாசுதான் என இந்த விஷயம் கிராமம் முழுவதும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கிராம மக்கள் அந்த குறிப்பிட்ட சுடுகாட்டு பாதையில் செல்ல அச்சப்படுகிறார்களாம்.