1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (13:43 IST)

கொரோனா பீதி: கோழி கிலோ ரூ.38க்கு விற்பனை - கண்டுகொள்ளாத மக்கள்!

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து வருவதால் கோழிக்கறி விலை மிகவும் குறைந்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை நம்பி பலர் இறைச்சி உண்பதை தவிர்த்து வருகின்றனர்.

இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவுவதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என மருத்துவ நிபுணர்கள் பலர் கூறினாலும், மக்கள் அச்ச உணர்வு காரணமாக கோழி முதலான இறைச்சிகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் சந்தையில் கோழி விலை பயங்கரமான சரிவை சந்தித்துள்ளது.

பிராய்லர் கோழிகள் உயிர் கோழி கிலோ 38 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஆனாலும் மக்கள் கோழி வாங்கி சாப்பிடுவதை விரும்புவதில்லை என்பதால் கறி விற்பனையாளர்களும் பண்ணைகளில் கோழி வாங்குவதை குறைத்து கொண்டு வருகின்றனர். பிரியாணி கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.