பதறிப்போன பென்ஷன் பார்ட்டிஸ்... விளக்கம் கொடுத்த கருவூலத்துறை!

புதன், 19 ஆகஸ்ட் 2020 (11:26 IST)
பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை என தமிழ்நாடு கருவூலத்துறை தகவல். 
 
ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருவதாகவும், இந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கியானது, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. 
 
ஆனால் இது போலியான தகவல் என தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது,  6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை. 6 மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகள் பற்றி கணக்கெடுக்க மட்டுமே அறிவுறுத்தப்பட்டது. 
 
பணப்பரிவர்த்தனை செய்யாத ஓய்வூதியதாரர்களை கணக்கெடுத்த பின்னர் அதற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என விளக்கமளித்துள்ளார். 

எல்லாம் காட்டு

ஆதரவு மட்டும் வேணும்!. ஆனா தீர்ந்து போன கட்சியா?!.. விஜய் பேசியது சரியா?...

உலகமே உங்கள சுத்திதான் இயக்குற மாதிரி நினைப்பா?!. விஜய்க்கு பழனிச்சாமி பதிலடி...

நாங்கலாம் கோட் சூட் போடக்கூடாதா?.. இதான் காரணம்!.. திருச்சியில் விஜய் அனல் பேச்சு!....

கதறுங்க!. கல்யாண வீட்லலாம் போய் ஏன் பொலம்புறீங்க?!.. திமுகவை நக்கலடித்த முதல்வர் விஜய்..

இந்த விஜய் கேள்வி கேட்பான்!.. சும்மா இருக்கமாட்டான்!.. திருச்சியில் முதல்வர் பேச்சு!..

அடுத்த கட்டுரையில்
Show comments