1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2024 (14:59 IST)

மணிக்கணக்கில் நிற்கிறோம், பஸ்ஸே வரவில்லை: கிளாம்பாக்கத்தில் பயணிகள் புலம்பல்..!

தமிழ்நாடு அரசு ஆயிரக்கணக்கான பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கி வருகின்றன என்று கூறப்படும் நிலையில் கிளாம்பாக்கத்தில் மணிக்கணக்கில் பயணிகள் நின்று கொண்டிருப்பதாகவும் ஆனால் தங்கள் ஊருக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வரவில்லை என்றும் புலம்பி வருகின்றனர்.  
 
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்துகள் இடைவெளியில் உள்ள அரியலூர் பெரம்பலூர் ஆகிய ஊர்களில் நிற்காது என்றும் திருச்சியில் மட்டுமே நிற்கும் என்றும் கண்டக்டர்கள் கூறுகிறார்கள் என்று பயணிகள் புலம்புகின்றனர். ’
 
திருச்சிக்கு செல்வோர்கள் மட்டும்தான் பொங்கல் கொண்டாட வேண்டுமா பெரம்பலூர் அரியலூரில் இருக்கிறவர்கள் பொங்கல் கொண்டாட வேண்டாமா என்று பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்,
 
ஒரு சிலர் திருச்சிக்கு டிக்கெட் எடுத்து விட்டு அரியலூரில் இறங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.  கர்ப்பமாக இருக்கும் பெண் என்று கூட பார்க்காமல் பெரம்பலூர் என்றவுடன் கண்டக்டர்கள் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு வருகின்றனர் என்றும் மனிதாபி இன்றி நடந்து கொள்வதாகவும் பயணிகள் புலம்பி வருகின்றனர் 
 
திருச்சி மதுரை என தொலைதூரத்திற்கு செல்லும் பேருந்துகள் தான் அதிகம் இருக்கிறது என்றும் இடையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் செல்லும் பயணிகளுக்கு பேருந்துகள் இல்லை என்றும் புலம்பட்டு வருகிறது.
 
Edited by Siva