ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 14 மே 2016 (13:37 IST)

யாருக்கு ஓட்டு போட சொல்கிறார் நடிகர் பார்த்திபன்: நம் வாக்கு சாவு அடியாகவும் இருக்க வேண்டும்!

வரும் திங்கள் கிழமை தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் நாள். எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தல் யூகிக்க முடியாத அளவுக்கு பலமுனை போட்டிகளுடன் அனல் பறக்கிறது.


 
 
யாருக்கு வாக்களிக்கலாம் என மக்களே குழம்பியுள்ளனர் என்பதை பிரதிபலிக்கிறது தற்போது வருகின்ற முன்னுக்கு பின் முரணான கருத்துக்கணிப்புகள். இந்நிலையில் பிரபல நடிகர் பார்த்திபன் யாருக்கு வாக்களிக்கலாம் என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நம் வாக்கு சாவு அடியாக இருக்க வேண்டும், சாவுக்கு அடியாக இருக்க வேண்டும் அரசியல் கட்சிகளுக்கு என கடுமையாக சாடியுள்ளார் பார்த்திபன். யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்காமல் நோட்டாவுக்கு வாக்களித்து மக்கள் ஒரு அரசியல் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என பார்த்திபன் கூறியுள்ளார்.
 
மக்களையும், வளங்களையும் சுரண்டி வாழும் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட நோட்டாவுக்கு வாக்களியுங்கள், அதே நேரத்தில் நல்ல வேட்பாளர் இருந்தால் (இருந்தால்?) அவருக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் நோட்டவுக்கு வாக்களியுங்கள் என கூறியுள்ளார் பார்த்திபன்.
 
திரும்ப திரும்ப தேர்தல் வந்தால் எவ்வளவு முறை தான் அவர்கள் ஓட்டுக்கு பணம் தருவார்கள். அரசு கஜானாவைப் போல அவர்களின் கஜானாவும் காலியாகட்டும். அரசியல் என்பது மக்களுக்கான சேவை மையம் என்பதை உணர்ந்த நல்லோர்கள் வரட்டும் நம் தேசம் காக்க! என நடிகர் பார்த்திபன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.