1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (08:45 IST)

பாஜக கூட்டணியில் இணையவுள்ளோம்: பாரிவேந்தர் அறிவிப்பு!

பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.  மேலும் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளோம் என்றும், பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

ஒரு பக்கம் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் அரசியல் கட்சிகளிடம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பாஜகவும் சுறுசுறுப்பாக மூன்றாவது அணி அமைக்கும் பணியில் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

பாஜக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் பாஜக கூட்டத்தில் இணைந்ததை உறுதி செய்தார். அந்த வகையில் அடுத்ததாக இந்திய ஜனதா ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் இணைந்து உள்ளதாகவும் அந்த கூட்டணியில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்டுள்ளதாகவும் உரிய நேரத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்

எனவே பாஜக கூட்டணியில் இரண்டு கட்சிகள் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக தேமுதிக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் இந்த கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அதிமுக கூட்டணியில் எந்த ஒரு கட்சியும் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பாஜக கூட்டணியில் இரண்டு கட்சிகள் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Edited by Siva