புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:13 IST)

மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்த பெற்றோர் போக்ஸோ சட்டத்தில் கைது!

ஆரணி அருகே மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன. விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு 35 வயதாகிறது. இந்நிலையில் இவர் திருவண்ணாமலை டவுன் பகுதியில் வசிக்கும் சேகர் மற்றும் சுந்தரி ஆகிய தம்பதிகளின் 14 வயது மகளை திருமணம் செய்துகொண்டதாக திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் திருமணம் நடந்தது உண்மைதான் எனத் தெரியவந்துள்ளது. அதையடுத்து மணிகண்டன் மற்றும் பெண்ணின் பெற்றோரான சேகர் மற்றும் சுந்தரி ஆகியவர்கள் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.