வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (08:37 IST)

புகார் அளிக்க சென்ற சிறுமிக்கு வன்கொடுமை! – கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்க சென்ற சிறுமி வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் தக்‌ஷின் கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு புகாரளித்த பின் விசாரணை செய்வதாக கூறி போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் அவர் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில் அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் அந்த சிறுமியை அவர் திருமணம் செய்து கொள்ளாததால் இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து கான்ஸ்டபிளை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.