1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2024 (10:44 IST)

பரந்தூர் விமான நிலையம்.! நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு..!!

Parantur Airport
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமையவுள்ளது. இதற்காக பரந்தூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்த அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் புதிய விமான நிலையம் அமைக்க,  நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசு வெளியிட்டது. இதனையடுத்து காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
 
protest
நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள், தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமைவெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 3, ஆர் ஆர் கார்டன், பரந்தூர் சாலை கற்பூரம் கம்பெனி அருகில், அங்காள பரமேஸ்வரி கோயில் பின்புறம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் மீது வரும் ஏப்ரல் 4ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.