1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (10:58 IST)

நீட் தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சியா? – பள்ளிக்கல்வித்துறை ரிப்போர்ட்!

Pallikalvithurai
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளை படிக்க நீட் தகுதி தேர்வு கட்டாயமாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒருபுறம் இருந்து வந்தாலும் நீட் தேர்வுகள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றது.

தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு நடந்து வரும் நிலையில் அரசு சார்பில் நீட் இலவச பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தின் விருதுநகர், விழுப்புரம், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுதிய அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 100% நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தேர்வு எழுதிய 172 அரசுப் பள்ளி மாணவர்களில் 104 பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.