9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ்! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆல்பாஸ் அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி தேர்வுகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் தாமதமாகவே திறக்கப்பட்டன.
பொதுவாக 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினாலே ஆல் பாஸ் என்ற நிலை உள்ள நிலையில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதை கருத்தில் கொண்டு 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளிக்க தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
9ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் பாரபட்சம் இல்லாமல் ஆல் பாஸ் அளிக்குமாறும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு விரைவில் தனித்தேர்வு நடத்தப்பட்டு பாஸ் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பு மாணவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.