1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (16:54 IST)

பாவங்களுக்கு சூத்திரதாரி முதல்வர் பழனிசாமி - துரைமுருகன்

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தலை கொண்டு வந்த ஸ்டாலினே அதை எதிர்ப்பது விந்தையாக உள்ளது. ஸ்டாலினுக்கு பாவமன்னிப்பு கிடையாது  என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்குப் பதிலடியாக திமுக பொருளாளர் துரைமுருகன், 'எத்தனையோ பாவங்களுக்கு சூத்தரதாரி 'என கூறியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் 33 வது மாவட்டமாக தென்காசி உருவாகியுள்ளதற்காக நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்துவது குறித்து பேசிய அவர் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பேசினார்.
 
அதில் அவர் “உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்காக ஸ்டாலின் பல்வேறு சூழ்ச்சிகளை செய்கிறார். 1996 வரை தமிழகத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்தான் இருந்தது அதை நேரடி தேர்தலாக மாற்றியது திமுக தான்.
 
பிறகு 2006ல் மீண்டும் அதை மறைமுக தேர்தலாக மாற்றினார்கள். கேட்டால் கவுன்சிலர்கள் ஒரு கட்சியாகவும், மேயர் ஒரு கட்சியாகவும் இருந்தால் ஒன்றுபட்டு பணிபுரிய முடியாது என்றார்கள்.ஸ்டாலின் அவர் இயற்றிய சட்டத்தை அவரே எதிர்ப்பது விந்தையாக உள்ளது. மேலும், ஸ்டாலின் செய்த பாவ மன்னிப்பே கிடையாது ” என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், முதல்வரின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில்,   திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளதாவது :
 
பொதுவாழ்க்கையில் நேர்மையும்,உண்மையும் இருப்போர் தான்  பாவ புண்ணியம் குறித்து பேச வேண்டும். அரசியல் வாழ்க்கை முதர்கொண்டு கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி முதல்வர் பழனிசாமி தான்  என தெரிவித்துள்ளார்.
 
மேலும்,  ஒரு நாள் இரவில் மறைமுகத் தேர்தல்  உதிப்பதற்கு என்ன காரணம்? தோல்வி பயம் தானே ? என தெரிவித்துள்ளார்.