பாலமேடு ஜல்லிக்கட்டு மூன்றாம் சுற்று முடிவு - நால்வருக்கு பலத்த காயம்!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் 4 பேர் படுகாயமுற்றனர்.
தமிழகத்தில் தை பொங்கலை ஒட்டி நடைபெறும் பாரம்பரிய மாடுபிடி போட்டியான ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரபலம் வாய்ந்தது. இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு 2வது சுற்று நிறைவுபெற்றது. 2ம் சுற்று முடிவில் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்துள்ளார். 5 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை மாடு முட்டியதில் உரிமையாளர்கள் இருவர், ஒரு பார்வையாளர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டில் காயமுற்ற 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவுப்பெற்றது. 3 சுற்றுகளில் இதுவரை 221 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.