செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஜனவரி 2022 (19:11 IST)

24 காளைகளை அடக்கிய காளையர் கார்த்திக்கிற்கு கார் பரிசு

24 காளைகளை அடக்கிய காளையர் கார்த்திக்கிற்கு கார் பரிசு
பொங்கல் திருநாளை ஒட்டி அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தில் சேர்ந்த கார்த்திக் முதலிடம் பெற்றார்
 
இதனை அடுத்து அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பரிசாக அளித்த கார் வழங்கப்பட்டது. மேலும் 19 காளைகளை அடக்கிய முருகனுக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பைக் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சிறந்த மாடுகளுக்கான பரிசுகளையும் மாடுகளின் உரிமையாளர்கள் பெற்றனர். இதில் முதல் பரிசை மணப்பாறையை சேர்ந்த தேவசகாயம் என்பவரும் இரண்டாவது பரிசை ராமு என்பவரும் மூன்றாவது பரிசை சதீஸ் என்பவரும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது