இந்திய குடியுரிமைக்காக பாகிஸ்தான் பெண்ணின் 35 ஆண்டு கால போராட்டம்..
நீண்ட கால விசாவில் இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தான் பெண் ஒருவருக்கு 35 ஆண்டுகளுக்கு பிறகு குடியுரிமை கிடைத்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த சுபேதா என்ற பெண், கடந்த 1984 ஆம் ஆண்டு, இந்தியாவின் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சையது முகம்மது என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். ஆனால் சட்டங்கள் துணை இருக்கவில்லை. மேலும் பாகிஸ்தான் பெண் என்பதால் சில அரசியல் காரணங்களுக்காகவும் குடியுரிமை தரப்படவில்லை.
ஆதலால் சுபேதா, அவரது விசாவை ஒவ்வொரு முறையும் புதுப்பித்து நீண்ட கால விசாவில் இந்தியாவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 35 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு கடந்த 4 தினங்களுக்கு முன்பு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இனி அவர் இந்திய குடிமகளுக்கான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, போன்ற ஆவணங்கள் வேண்டி விண்ணப்பிக்கலாம். சுபேதாவுக்கு தற்போது வயது 55 என்பதும், அவருக்கு இரு மகள்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.