வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 30 மே 2022 (11:52 IST)

முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு: ராஜ்யசபா எம்பி பதவிக்கு வாழ்த்து பெற்றார்

pc and mks
முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு: ராஜ்யசபா எம்பி பதவிக்கு வாழ்த்து பெற்றார்
தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ப சிதம்பரம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்
 
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்ட நிலையில் அந்தப் பதவிக்கு வேட்பாளராக ப சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்
 
 இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்
 
இந்த சந்திப்பின்போது ப சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது