செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 28 மே 2022 (19:45 IST)

இந்தியா முழுவதும் திராவிடம் மாடல்: முக ஸ்டாலின் பேச்சு

stalin
தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் திராவிட மாடல் பரவிவிட்டது என இன்றைய கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார் 
 
கருணாநிதியின் கொள்கைகளை வருங்கால சந்ததிகளுக்கு கொண்டு செல்வோம் என்றும் அதற்காக நாடு முழுவதும் திரையிடல் பயிற்சிகள் நடத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார் 
 
தமிழகத்தில் தோன்றிய திராவிட மாடல் நாடு முழுவதும் பரவி விட்டது என்றும் இன்னும் சில ஆண்டுகளில் நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
திராவிட மாடல் என்பது பொருளாதார ரீதியில் உயர்வது மட்டுமின்றி சமூக நீதி பெண்கள் உயர்வு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டது என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார் 
 
மேலும் திராவிட மாடல் குறித்து தெருமுனை கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்