எங்களின் எதிரிகள் ’இந்த இரண்டு கட்சிகள் ’தான் - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை மாநில கல்லூரியில் இன்று நடந்த நிகழ்சியில் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விளையாட்டுத் துறைக்காக 3 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது நம் தமிழகத்தில் தான். ஏழைகளை கைதூக்கி விடும் மாநிலம் இது. இங்கு எம்.ஜி,.ஆர் . காலத்திலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முன்னதாக ஒரு கிலோ அரிசி அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது அதே போலவே தற்போதும் வறுமை கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்கு ரூ. 2000 வழங்க இருகிறோம்.
மேலும் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு பயிற்சி மூலமாக முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம் பேருக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது வரைக்கும் 80 லட்சம் இளைஞர்கள் பாசறையில் இருக்கின்றனர்.
தேர்தலை நாங்கள் ஒத்தி வைக்கவில்லை;தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதற்கு நாங்கள் தயார். கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.திமுக, அமமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் எங்களின் எதிரி கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுடன்ன் கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.