Daily Horoscope
✕

கேமிரா ஆர்டர் செய்த வாலிபருக்கு பெயிண்ட் டப்பாவை அனுப்பிய ஆன்லைன் நிறுவனம்

Written By siva
Updated: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (08:40 IST)
கேமிரா ஆர்டர் செய்த வாலிபருக்கு பெயிண்ட் டப்பாவை அனுப்பிய ஆன்லைன் நிறுவனம்
கேமரா ஆர்டர் செய்த சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஆன்லைன் நிறுவனம் பெயிண்ட் டப்பாவை அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த வினோத் என்ற வாலிபர் 28 ஆயிரம் மதிப்புள்ள கேமரா ஒன்றை ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்தார். சலுகை விலையில் அந்த கேமரா 26,500  ரூபாய் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அதனை அவர் 12 மாத தவணைகளில் ஆர்டர் செய்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் சமீபத்தில் பார்சல் வந்தவுடன் அதை அவர் ஆசையுடன் பிரித்து பார்த்தபோது அதில் போலி கேமரா ஒன்றும் பெயிண்ட் டப்பா ஒன்றும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் 
 
இதனை அடுத்து அவர் ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது உரிய பதில் கிடைக்காததை அடுத்து அவர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
26 ஆயிரம் மதிப்புள்ள கேமராவை ஆர்டர் செய்த வாலிபருக்கு நூறு ரூபாய் மட்டுமே மதிப்புள்ள பெயிண்ட் டப்பா டெலிவரி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

எல்லாம் காட்டு

சென்னையில் ரோட் ஷோ செய்யும் பிரதமர் மோடி!.. ஏற்பாடுகள் தீவிரம்..

டெல்லி காவல் அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் கைது! எதிர்க்கட்சிகள் கண்டனம்..

3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. முழு விவரங்கள் இதோ..

போன வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவு.. இந்த வாரம் மீண்டு வந்ததால் நிம்மதி...

தனுஷின் இயக்கத்தில் இணைந்தாரா நாஞ்சில் சம்பத்?!.. அவரே சொன்ன விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments