1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 ஜனவரி 2023 (11:00 IST)

திடீரென குஜராத் செல்லும் ஓபிஎஸ்... என்ன காரணம்?

OPS
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலத்திற்கு சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த போவதாக நேற்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி நேற்று அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட ஒரு சில அரசியல்வாதிகளையும் சந்தித்தார். 
 
இந்த நிலையில் இன்று அவர் திடீர் என குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சென்றுள்ளார். அங்கு தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற உள்ளதை அடுத்து அந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் அகமதாபாத் சென்றதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் குஜராத்தில் உள்ள முக்கிய பிரபலங்களை அவர் சந்திக்க இருப்பதாகவும் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபிஎஸ் அவர்களுடன் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேர் குஜராத் செய்திருப்பதாக தெரிகிறது.
 
Edited by Siva