ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (14:06 IST)

தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: ஓபிஎஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு!

OPS
அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
 
திமுக பொதுக்குழு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுகுழு கூட்டம் செல்லும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தேனியில் ஓபிஎஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு நாளில் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்