1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (19:31 IST)

ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை: சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு?

srimathi mother
ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை என்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் இதனை எதிர்த்து ஸ்ரீமதி பெற்றோர் உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
 
கனியாமூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஸ்ரீமதி திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்துவரும் நிலையில் ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது 
 
மேலும் ஒரு மாணவியை நன்றாகப் படி என்று ஆசிரியர்கள் கூறியதற்காக அவர்கள் சிறையில் வாடுவது சரியானதல்ல என்றும் நீதிபதி கருத்து தெரிவித்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிறுமியின் பெற்றோர் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன