செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2018 (11:06 IST)

எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு! ஓபிஎஸ் தத்துவ பதில்

முன்னாள் முதல்வரும் இந்நாள் துணை முதல்வருமான ஓபிஎஸ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 'நீங்கள் முதல்வர் பதவியை இழந்து ஒரு வருடம் ஆகிறது; முதல்வர் பதவியை இழந்ததற்காக வருத்தப்படுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் கூறிய ஓபிஎஸ், 'இது நல்ல கேள்வி... எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு? என்று தத்துவத்மான பதிலை கூறி செய்தியாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாகவும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும் அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், 'நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அம்மா உணவகம் லாபத்திற்காக நடத்தப்படுவது அல்ல. மக்களின் பசிதீர்க்க அம்மாவால் கொண்டு வரப்பட்ட திட்டம். பொதுமக்களின் பசியை தீர்க்க அம்மா உணவகம் தொடர்ந்து இயங்கும்' என்று கூறினார்.