Daily Horoscope
✕

சசிக்கலாவை அதிமுகவில் இணைத்து கொள்வீர்களா? ஓபிஎஸ் சொன்ன பதில்!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 8 மார்ச் 2022 (09:31 IST)
சசிக்கலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வீர்களா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெருமளவில் வெல்லாத நிலையில் சசிக்கலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுகவில் உள்ளவர்களே தொடர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக பிரபலங்கள் சிலர் தொடர்ச்சியாக சென்று சசிக்கலாவை சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிமுக, அமமுக கட்சிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சசிக்கலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வீர்களா என்று கேட்கப்பட்டபோது “ஐயோ சாமி.. வாங்க சாமி!” என்று சொல்லிவிட்டு நழுவியுள்ளார்.

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments