புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (11:38 IST)

எடப்பாடியாரை ஏன் எதிர்த்தீங்க?: ஒரு மாசத்துல பதில் சொல்றோம்! – ஓபிஎஸ் அவகாசம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தது குறித்து பதிலளிக்க ஓபிஎஸ் மற்றும் எம்.எல்.ஏக்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்க நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அன்று எடப்பாடியார் மீது அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் பெருவாரி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

அவர்மீது அதிருப்தி தெரிவித்த 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது. அந்த மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்யவே உச்சநீதிமன்றம் சென்றது திமுக.

ஆனால் உச்சநீதிமன்றம் இதுகுறித்து சபாநாயகர்தான் கேள்வி கேட்க முடியும் என கூறியது. இந்நிலையில் 11 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தது ஏன்? என கேள்வியெழுப்பி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸுக்கு விளக்கம் தர ஒரு மாத காலம் அவகாசம் தரும்படி ஓபிஎஸ் மற்றும் எம்.எல்.ஏக்கள் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.