1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (21:03 IST)

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு ?

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு ?

தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் ரூ. 15 ஆயிரம் கோடியை பெற நடவடிக்கை எடுக்காததால் தமிழக மின்சாரம வாரியம் 300 % மின்கட்டண உயர்வை சந்திக்கவுள்ளதாகவும் தமிழ்நாடு பொறியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
தமிழக மின்சார வாரியம் தற்போது  ஒரு லட்சத்துக்கு 33 ஆயிரம் கோடி கடன் சுமையில் இருக்கும் நிலையில்,. தனியார் உற்பத்தியாளர்கள், காற்றாலை உற்பத்தியாளர்களிடம் இருந்து வர வேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாய் கோடி நிலுவை தொகை இன்று வரை வாரியத்திற்கு வரவில்லை என்று தெரிகிறது.
 
இந்நிலையில், மின் துறை நிதிச்செயலர் மற்றும் வாரியத்தின் உயர்  அதிகாரிகள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாகவும், இதுதொடர்பாக தமிழக அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பொறியாளர்கள் அமைப்பு தலைவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 
 
எனவே, தமிழகத்தில் இப்போதுள்ள மின்கட்டண தொகையில் இருந்து கட்டண உயர்வை மேலும் அதிகப்படுத்தினால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.