திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (07:03 IST)

ஒரே விமானத்தில் முகஸ்டாலின்-ஓபிஎஸ் பயணம்: ரகசிய சந்திப்பா?

ஒரே விமானத்தில் முகஸ்டாலின்-ஓபிஎஸ் பயணம்
நேற்று மதுரையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பயணம் செய்து வந்த நிலையில் இருவரும் சந்தித்து பேசியதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் இரு துருவங்களாக இருக்கும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து விலகி இன்னொரு கட்சிக்கு கட்சியில் சேர்வது என்பது அரிதாகவே இருக்கின்றது. பரஸ்பரம் இரு கட்சியின் தலைவர்கள் நேரில் சந்திப்பது கூட அபூர்வமாகத்தான் இருக்கும்
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அதிருப்தியில் இருப்பதாகவும் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நேற்று மதுரையில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் மூலம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்றார். அதே விமானத்தில் முக ஸ்டாலின் அவர்களும் சென்றதாகவும் இருவரும் சில நிமிடங்கள் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு சிலர் ஒரே விமானத்தில் சென்றாலும் இருவரும் சந்தித்து பேசவில்லை என்றும் அதே விமானத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் மூன்று அமைச்சர்களும் சென்றனர் என்றும் கூறப்படுகிறது