வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 அக்டோபர் 2020 (10:49 IST)

பெயரை மாற்றிக்கொண்ட மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத் ! நியுமராலஜிதான் காரணமா?

தேனி மக்களவை உறுப்பினரும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனுமாகிய ஓ பி ரவீந்தரநாத் குமார் தன் பெயரை நியுமராலஜி படி மாற்றிக்கொண்டுள்ளார்.

தேனி மாவட்டத்தின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ பி ரவீந்தரநாத். தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பாக டெல்லிக்கு சென்றிருக்கும் ஒரே ஒரு மக்களவை உறுப்பினர் இவர்தான். பாஜக அரசு எந்த மசோதா கொண்டு வந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் ஒரே ஒரு ஆதரவுக் குரல் இவருடையதுதான்.


இந்நிலையில் இவர் தன் பெயரை இப்போது கெசட்டில் ஓ பி ரவீந்தரநாத் என மாற்றிக்கொண்டுள்ளார். அவரது முழுப் பெயர் ரவீந்தரநாத் குமார் ஆகும். அதுபோல இதுவரை ஆங்கிலத்தில் Raveendranath என எழுதி வந்தவர் இப்போது Ravindranath என மாற்றிக்கொண்டுள்ளார். இந்த மாற்றத்துக்கு நியுமராலஜிதான் காரணம் என சொல்லப்படுகிறது.