புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (10:27 IST)

வழிகாட்டு குழு அமைக்க ஒத்துக்கிறேன்.. ஆனா? – எடப்பாடியார் போட்ட கண்டிஷன்??

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் வழிகாட்டும் குழு அமைக்க முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இருவரையும் அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அக்டோபர் 6ம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சிகளை அமைச்சர்கள் மேற்கொண்டு வரும் நிலையில் வழிகாட்டும் குழு அமைக்க ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறாராம். வழிகாட்டும் குழுவை அமைக்க ஒப்புக்கொள்வதாகவும், பதிலாக தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் எடப்பாடியார் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களுக்குள் பேசி கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் 6ம் தேதி எம்.எல்.ஏக்களை அழைத்துள்ள நிலையில் 7ம் தேதி அதிமுக தலைமை விடுக்கும் அறிவிப்பு தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாகவும், திருப்பு முனையை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.