ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் நஷ்டம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி!
ஆன்லைன் ரம்மியில் ரூபாய் 20 லட்சத்துக்கு மேல் இழந்ததை அடுத்து குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் ஓமலூர் என்ற பகுதியில் ஆன்லைன் ரம்மியில் ஒருவர் ரூபாய் 20 லட்சத்துக்கு மேல் இழந்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து கடனாளி ஆகி விட்ட அவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்
இதனை அடுத்து அவர் தனியார் லாட்ஜ் ஒன்றில் குடும்பத்துடன் தங்கிய அந்த நபர் தனது மனைவிக்கும் குழந்தைக்கும் விஷம் கொடுத்து அதன் பின் விஷமருந்தி உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் மயங்கிய நிலையில் இருந்த கணவன் மனைவி மற்றும் குழந்தை ஆகிய 3 பேரையும் மீட்டு லாட்ஜ் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்த தாகவும் கூறப்படுகிறது. தற்போது மூன்று பேரும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
ஆன்லைன் ரம்மி காரணமாக ஏற்கனவே பல உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை முயற்சி செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.