1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2023 (14:10 IST)

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு

online
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் சமீபத்தில் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். 
 
இந்த முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மனுவாக தாக்கல் செய்த பின் இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்த வழக்கின் முடிவில் தான் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தின் தலைவிதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva