1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2023 (11:54 IST)

போதை மருந்துகளை பயன்படுத்தி ஷூட்டிங்குக்கு வந்த நடிகர்கள்… தடை விதித்த தயாரிப்பாளர் சங்கம்!

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம்,  இஷக், கும்பளங்கி ஆகிய மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் பலமுறை பல சர்ச்சைகளில் சிக்கி செய்தியாகியுள்ளார். இந்நிலையில் இப்போது இவரும் மற்றொரு சக நடிகருமான ஸ்ரீநாத் பாஷி ஆகிய இருவரும் போதை பொருட்களை பயன்படுத்தி, ஷூட்டிங்குக்கு வந்து படக்குழுவினருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாக தயாரிப்பாளர் ரஞ்சித், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றில் புகாரளித்துள்ளார்.

இதன்படி நடந்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் மலையாள சினிமாவில் நடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.