1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2019 (12:23 IST)

வெங்காயம் விலை ஜெட் வேகத்தில் உயர்வு ..இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

நாட்டில் தங்கத்தின் அளவுக்கு சின்ன வெங்காயம் பெரிய வெங்காயத்தில் விலை கிர்ர்ர்  என ஏறிக்கொண்டே போவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து வரும் வெங்காயங்கள் மாஇ காரணமாக அழுகியதால் விலை திடீரென அதிகரித்துள்ளது.
 
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய  வெங்காயம் ரூ. 50 முதல் ரூ. 70 வரை விற்கப்படுகிறது. சின்னவெங்காயம் ரூ. 60 முதல் ரூ. 90 வரை விற்கப்படுகிறது.
 
இதுதவிர, தக்காளி, உருளை, கேரட், பீன்ஸ்,பீட்ரூட், அவரை, கோஸ், வெண்டைக்காய் விலையும் ஏழைகள் சமையல் செய்யலாமா வேண்டாமா என யோசிக்கத் தோன்றுமளவு உயர்ந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.