திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By anandakumar
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (22:19 IST)

ஆறுமுகப்பெருமாள் முருகனுக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி

கரூரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப்பெருமாள் முருகனுக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் நகரில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பரிவாரத்தெய்வங்களில் ஒன்றான ஆறுமுகப்பெருமாளுக்கு ஸ்கந்த சஷ்டி விழாவினையொட்டி லட்சார்ச்சனை நிகழ்ச்சியும் தொடங்கி தினம் தோறும் விஷேச லட்சார்ச்சனைகளும், கூட்டு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன.

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் இந்து சமய  அறநிலையத் துறையினர் இதற்கான முழு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.