செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (11:56 IST)

வெங்காயத்தை பதுக்கினால் சிறை தண்டனை

வெங்காயத்தை பதுக்கினால் அதிகபட்சமாக  7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என சிஐடி டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதனிடையே தமிழகத்தில் வெங்காயத்தை பலர் பதுக்கி வைப்பதாக பல புகார் எழுந்த நிலையில், சிவில் சப்ளை சிஐடி போலீஸார் தமிழகம் முழுவதும் 33 தனிப்படைகள், பதுக்கல் வெங்காயங்களை கண்டுபிடிக்க சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் யாராவது வெங்காயத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தால், சிவில்சப்ளை சிஐடி போலீஸுக்கு தகவல் கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் வெங்காயத்தை பதுக்கி வைத்ததாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும் எனவும், சம்பந்தப்பட்ட வியாபாரிகள் குடோனில் வைத்திருக்கும் வெங்காயத்துக்கு உரிய ரசீது இல்லை என்றால் வழக்கு தொடரப்படும் எனவும் சிவில் சப்ளை சிஐடி, டிஜிபி பிரதீப் பிலிப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.